தஞ்சை பெரிய கோயிலில் தேவாரம் பாடி வைகோ வழிபாடு!
நாத்திகம் பேசும் வைகோ கோயில் கருவறை வரை சென்று பெருவுடையார் சன்னதி முன்பு மண்டியிட்டு வழிப்பாடு செய்தது குறித்து...

தஞ்சை பெரிய கோயிலில் தேவாரம் பாடி வழிபாடு செய்த வைகோ - DNS
தஞ்சை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரிய கோயிலுக்கு சென்று மூலவர் சன்னதி முன்பு நின்று அர்ச்சகரிடம் தேவாரம் திருவாசகம் தெரியாதா என கேட்டுவிட்டு, நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டார்.
நாத்திகம் பேசும் வைகோ கோயில் கருவறை வரை சென்று பெருவுடையார் சன்னதி முன்பு மண்டியிட்டு வழிப்பாடு செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுத்து, மேக்கேதாட்டு குறுக்கே அணைக்கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசையும், அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டித்தும் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சனிக்கிழமை தஞ்சாவூர் வந்தார்.
முன்னதாக, தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த வைகோ, பெரியக் கோயில் கருவறைக்கு செல்ல தயங்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் நாத்திகம் பேசி வரும் வைகோ, பெருவுடையார் மூலவர் சன்னதி முன்பு மண்டியிட்டு வணங்கி வழிபட்டார்.

சிவாச்சாரியாரிடம் தேவாரம் திருவாசகம் தெரியாதா என கேட்டு விட்டு ஆரத்தி தட்டினை தொட்டு வணங்கிய வைகோ
சிவாச்சாரியாரிடம் தேவாரம் திருவாசகம் தெரியாதா என கேட்டு விட்டு
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குரு மனிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!
சிவாச்சாரியார் தமிழில் என் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என தமிழில் அர்ச்சனை செய்து தீபாரதனை காட்டினார்.
சிவாச்சாரியார் காட்டிய ஆரத்தி தட்டினை தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிக் கொண்டு வழிபட்டார்.
வைகோவின் இந்த செயல் அனைவரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Vaiko offers worship at the Thanjavur Big Temple while singing Thevaram hymns!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

