கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஜாமின் மனு: அரசு பதிலளிக்க உத்தரவு?
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் ஜாமின்கோரி மனு தாக்கல் செய்தது குறித்து...
கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் - கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏவான சி. அருள் விக்னேஷ், ஜாமின்கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை போலீஸார் வெள்ளிக்கிழமை (நவ. 27) கைது செய்தனர்.
இந்த நிலையில், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அருள் விக்னேஷ், ஜாமின்கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவரின் ஜாமின் மனு மீதான விசாரணை, டிச. 1 ஆம் தேதிக்கு வரவுள்ளதாகவும், அரசு வழக்குரைஞர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Summary
Kallakurichi TVK MLA C. Arul Vignesh files bail plea
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


