தென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

ஆம்ஸ்ட்ராங் கொலை: தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி குறித்து...

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம் - ENS

Published On :

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக அச்சுறுத்தி, தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாணையின் போது தொழிலதிபர் ஒருவரின் செல்போன் எண் சிக்கியிருப்பதாகக் கூறி, அவரை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த (ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு) சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீஸார் ஆக.3 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், ஏற்கெனவே ஜாமீன் கோரி முகமது புஹாரி இரண்டு முறை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்தநிலையில், முகமது புஹாரி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முகமது புஹாரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Armstrong murder: Police Inspector's bail plea dismissed in case involving extortion of RS.40 lakh from a businessman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.