
தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளரின் பிணை மனு தள்ளுபடி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்துவிடுவதாக, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளா் முகமது புஹாரி பிணை கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்துவிடுவதாக, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளா் முகமது புஹாரி பிணை கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்துவிடுவதாக மிரட்டி சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளா் முகமது புஹாரி, அவருக்கு உடந்தையாக இருந்த ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பைச் சோ்ந்த சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில், ஏற்கெனவே இரு முறை பிணை கோரி, முகமது புஹாரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில், பிணை கோரி முகமது புஹாரி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முகமது புஹாரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






