வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

தமிழக மக்கள் அதிகளவில் கதர் ஆடைகளை வாங்க வேண்டும்! முதல்வர் விஜய்

நாளை (அக். 2) மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் விஜய் வேண்டுகோள்...

vijay

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Published On :

தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும்,
கிராமப் பொருள்களையும் வாங்கி நூற்பாளர், நெசவாளர் மற்றும் கைவினைஞர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும் என்று முதல்வர் ச. ஜோசப் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை (அக். 2) மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, காந்தி ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான  அக்டோபர்  2-ஆம் நாள், நம் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும், எளிமை, சுயநம்பிக்கை, உழைப்புக்கு மதிப்பு, அனைவரையும் அரவணைக்கும் மனிதநேயத்தையும் நினைவுகூரும் நாளாகத் திகழ்கிறது. அகிம்சை என்னும் ஆயுதத்தை ஏந்திய அண்ணல் காந்தியடிகள், இராட்டை என்னும் நூற்புச் சக்கரத்தின் மூலம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பொருளாதார சுதந்திரத்தையும், சுயசார்பையும் போதித்தார்.

ஒரு கதராடையை நாம் வாங்குவது, ஒரு நெசவாளரின் கைத்திறனுக்கு அளிக்கும் அங்கீகாரம். ஒரு கிராமப் பொருளை நாம் வாங்குவது, ஒரு கைவினைஞரின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை. உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருளை நாம் பயன்படுத்தும்போது, அது நமது மண்ணின் உற்பத்தித் திறனுக்கு அளிக்கும் ஊக்கம்.

இன்றைய காலகட்டத்தில், சுற்றுச்சூழல் நேயமிக்க, இயற்கை இழையால் ஆன ஆடைகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைத்து, புதிய வடிவமைப்புகளிலும், மின்னணு வணிகத் தளங்கள் வாயிலாகவும் கதர் கிராமத் தொழில் பொருள்களை எளிதில் அனைவரும் அணுகும் வகையில் மேம்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கதரங்காடிகள் வழியாக, ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பட்டு இரகங்களைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும், கிராமப் பொருள்களையும் வாங்கி, நம் நூற்பாளர், நெசவாளர் மற்றும் கைவினைஞர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

The people of Tamil Nadu should buy Khadi garments in large numbers! Chief Minister Vijay's appeal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.