வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

நீலகிரி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

கனமழை எச்சரிக்கை பற்றி வானிலை ஆய்வு மையம் கூறுவதாவது..

Heavy rain

கனமழை எச்சரிக்கை - கோப்புப்படம்

Published On :

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

சுமார் 1.5 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. • சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

எங்கெல்லாம் கனமழை?

அக். 01ல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை..

01-10-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

02-10-2026 முதல் 05-10-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று (01-10-2026) மற்றும் நாளை (02-10-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER