காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்
காந்தி பிறந்த நாளில் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி...

கோப்புப்படம் - X | MKStalin
காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம், அவரிடம் இருந்து கற்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”சத்தியத்தின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாத மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள்.
இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அவர் வாழ்க்கையில் பெற்ற ஒவ்வொரு அனுபவத்தையும் கொண்டு தொடர்ந்து தன்னைச் செதுக்கிக் கொண்டவர் காந்தியடிகள்.
தொடர்ந்து சமூகத்தோடு உரையாடினார். தொடர்ந்து தன்னையும் தன் கருத்துகளையும் மாறுபாட்டுக்கு உட்படுத்திக் கொண்டே வந்தார். ஆனால், உண்மையாக இருந்தார்.
அதனால்தான், 'என் வாழ்க்கையே நான் விட்டுச் செல்லும் செய்தி' என அவரால் கூற முடிந்தது.
அவரது பெருமையைப் போற்றும் வகையில், நமது திராவிட மாடல் ஆட்சியில் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தேன், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தைப் பழமை மாறாமல் புதுப்பித்தோம், உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகளை மீண்டும் வழங்கத் தொடங்கினோம்.
காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! அவரிடம் இருந்து கற்போம்! மதநல்லிணக்கம் போற்றும் இந்தியாவைக் காப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Let us study the life of Gandhiji - Let us safeguard an India of religious harmony — M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





