அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்தவர் காந்தியடிகள்: முதல்வர் விஜய்
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் விஜய்யின் சமூக வலைதளப் பதிவு.
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்தவர் மகாத்மா காந்தி என்று அவரது பிறந்த நாளில், முதல்வர் விஜய் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும். தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.
எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர்.
மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
On the occasion of his birth anniversary, Chief Minister Vijay stated in a social media post that Mahatma Gandhi amazed the entire world with the mighty weapon of non-violence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






