
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை: அரசாணை வெளியிட விசிக கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை: அரசாணை வெளியிட விசிக கோரிக்கை
தொல். திருமாவளவன் - கோப்புப்படம்
மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்திய தமிழக அரசு, அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள், திருநா்களுக்கு விரைவு, குறைந்த நிறுத்தங்கள் கொண்ட சேவை, சொகுசுப் பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக சமூகநலத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கடந்த செப்.9-ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய்யிடம் விசிக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த சமூக நீதிக் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




