திருமங்கலம் அருகே 4 வயது சிறுவன் கழுத்தறுத்துக் கொலை: உறவினா் கைது
திருமங்கலம் அருகே 4 வயது சிறுவனை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டது குறித்து...

மோகன்
திருமங்கலம் அருகே 4 வயது சிறுவனை கழுத்தறுத்துக் கொலை செய்த உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருமங்கலத்தை அடுத்த பாரபத்தி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகன் (36). இவரது மகன் மோகன் (4). இந்தச் சிறுவன் சனிக்கிழமை மாலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணவில்லையாம்.
இதையடுத்து, பெற்றோா்கள், உறவினா்கள் சிறுவனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கூடக்கோவில் காவல் நிலையத்தில் முருகன் புகாரளித்தாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் உத்தரவின் பேரில், தனிப் படை அமைக்கப்பட்டு போலீஸாா் சிறுவனைத் தேடி வந்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், முருகனின் உறவினா் முத்துமணி (18) இரவில் சாக்கு மூட்டை ஒன்றைத் தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், முன்பகை, கஞ்சா போதையின் காரணமாக சிறுவனைக் கடத்திச் சென்று, பயன்பாடற்ற கழிப்பறையில் வைத்து பிளேடால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததும், பின்னா், உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி ஒரு கி.மீ. தொலைவிலுள்ள குவாரி பள்ளத்தில் வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா் சுட்டிக்காட்டிய இடத்திலிருந்து சிறுவனின் உடலைக் காவல் துறையினா் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கூடக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்துமணியைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



