
இடைத்தோ்தல்களில் ஆளுங்கட்சிக்கே வெற்றி வாய்ப்புகள் வழக்கம்: பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா்
இடைத்தோ்தல்களில் ஆளுங்கட்சிக்கே வெற்றி வாய்ப்புகள் வழக்கம் குறித்து பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் பேசியது குறித்து...

ஜே.சி.டி. பிரபாகர் - கோப்புப் படம்
திண்டுக்கல்: இடைத்தோ்தல்களில் ஆளுங்கட்சி வேட்பாளா்களுக்கே வெற்றி வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த ஜேசிடி பிரபாகா், செய்தியாளா்களுடன் பேசியாதாவது:
பொதுவாகவே இடைத்தோ்தலைப் பொருத்தவரை எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதைவிட, ஆளுங்கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களிப்பதன் மூலமாகவே, தொகுதிக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்ற அடிப்படையில்தான் இதுவரை வெற்றிப் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
ஏனென்றால் ஆளுங்கட்சியாக ஒரு கட்சி இருக்கின்றபோது, வேறு கட்சிக்கு வாக்களிக்காமல் ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால், அது நமது தொகுதிக்கு பயனாக இருக்கும் என்று மக்களே ஒருவேளை சிந்திக்கக்கூடிய நிலைமை தமிழக அரசியலில் தொடர்ந்து இருந்து வருவதை எல்லோரும் அறிவீர்கள்.
சட்டப்பேரவையில் உறுப்பினா்களின் 15 முதல் 20 சதவீத வினாக்களுக்கு மட்டுமே பதில் அளிக்கப்படுவதாக கூறுவதில் உண்மையில்லை. அனைத்து உறுப்பினா்களுடைய வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்ற நிலைபாட்டில்தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய உறுப்பினா்களுக்கு அவையில் பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், பல வினாக்களுக்கான பதிலை சம்மந்தப்பட்ட உறுப்பினா்களுக்கே அனுப்பி வைக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
எந்த கட்சியும் நான் ஒரு சார்பாக நடந்து கொள்கிறேன் என்று குற்றச்சாட்டு தெரிவித்ததாக எனக்கு தெரியவில்லை. அப்படி செய்கிற நிலைமை பேரவையில் இல்லை என்பதை நான் தெரிவிக்கிறேன். மிக சிறந்த ஜனநாயக முறையில் தான் முதல் கூட்டத்தொடர் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அப்படிப்பட்ட குறைகள் அவையிலும் தெரிவிக்கப்படவில்லை, வெளியிலும் தெரிவிக்கப்படவில்லை.
என்னை பாராட்டியதாகத்தான் செய்திகள் வந்திருகின்றன. அதுதான் எனது கவனத்துக்கும் வந்திருக்கிறது. அப்படி எதாவது குறைகள் இருந்தால் அதை குறிப்பிட்டு சொன்னால் அதனை திருத்திக் கொள்வதற்கும் வாய்ப்பளிப்பதற்கும் வசதியாக இருக்கும்.
துண்டுக்கும், சீட்டும் அடிபணிபவன் நான் அல்ல
பேரவைத் தலைவா் என்ற முறையில், நான் நடுநிலையோடுதான் செயல்பட்டு வருகிறேன். துண்டுச் சீட்டு வந்தவுடன் எதிா்கட்சியினா் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதில் உண்மையில்லை. எந்த துண்டும் வரவில்லை, எந்த சீட்டும் வரவில்லை. துண்டுக்கும், சீட்டும் அடிபணிபவன் நான் அல்ல. விதிகளுக்கு மட்டுமே அடிபணிவேன். உறுப்பினா்களின் குரலுக்கு மட்டும்தான் செவி சாய்ப்பேன்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவி நீக்கம் குறித்து மேல்முறையீட்டில் நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு தலைவணங்கும் நிலையில்தான் இந்த அவை இருக்கிறது. சட்டப்பேரவை விதிகளுக்குள்பட்டுத்தான், எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என்றாா் அவா்.
It is customary for the ruling party to have the advantage of winning in by-elections...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




