
மதுரை: ஆம்புலன்ஸ்-கார் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி!
மதுரையில் ஆம்புலன்ஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்து பற்றி....

விபத்து.
மதுரையில் ஆம்புலன்ஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் - கப்பலூர் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ், கார் நேருக்கு நேர் மோதி ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர்.
விபத்தில் ஆம்புலன்ஸில் வந்த 2 பேர், கார் ஓட்டுநர் பலியான நிலையில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சொக்கநாதன் பட்டி விளக்கு என்ற இடத்தில் நடந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
The incident in which 3 people were killed in a head-on collision between an ambulance and a car in Madurai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






