தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

KG Arunraj

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.

Published On :8 அக்டோபர் 2026, 11:57 am IST

தமிழ்நாட்டில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:

”தமிழ்நாடு அரசு சார்பில் டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் நாள்தோறும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக நாளொன்றுக்கு 1,000 பேர் பரிசோதனை செய்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் ஜன. 1 முதல் அக். 7 வரை, 21,655 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சென்னையில் டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டடப் பணிகள் நடக்கும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கியிருந்தால் முதல்முறை ரூ. 10,000 அபராதமும், இரண்டாவது முறை கூடுதலாகவும் வசூலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Summary

10 deaths and 21,655 cases of dengue fever in Tamil Nadu: Minister Arunraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.