தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!தட்டாஞ்சாவடியில் டெபாசிட் இழந்த திமுக!மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே கோலோச்சும் மரகதம்!தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான வழக்கில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து....

Case against former Minister E.V. Velu

எ.வ.வேலு - கோப்புப் படம்

Published On :

சென்னை: திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் எடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி, திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, நடத்தப்பட்டது. இந்த மாநாட்டு திடலை சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு, 10 முதல் 23 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.8 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில், கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்திருந்தது.

இந்த நிலையில், இருவர் தரப்பிலும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என வாய்மொழியாக உத்தரவிட்டதுடன், முன்ஜாமீன் கோரிய மனுக்களுக்கு லஞ்ச ஒழிப்புத்து றை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Case against former Minister E.V. Velu: High Court stays action

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER