எஸ்ஐஆர்: பிரதமருக்கு தெரியாமல் இது நடந்திருக்காது! முதல்வர் விஜய் பேச வேண்டும்! மு. வீரபாண்டியன்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் முதல்வர் விஜய் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கருத்து...
முதல்வர் விஜய் | சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்
தலைமை தேர்தல்ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் பிரதமர் மோடியும் அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
ஓசூரில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"தலைமை தேர்தல்ஆணையர் ஞானேஷ் குமார் 13 கோடி பேரின் வாக்குரிமையைப் பறித்து ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டிருக்கிறார்.
இது நாட்டின் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அரசியல்ரீதியாக இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இதற்கு நேரடி பொறுப்பேற்று தலைமை தேர்தல்ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். இது ஜனநாயகப்பூர்வமான, நியாயமான கோரிக்கை.
இதற்காகத் தான் இன்று மாணவர்களும், காங்கிரஸ், சிஜேபி உள்ளிட்ட கட்சிகளும் போராடுகின்றன.
இந்த சூழலில் தமிழ்நாடு மிக முக்கியமான மாநிலம். தமிழக முதல்வர் தனது கருத்தைச் சொல்ல வேண்டும். எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று சொல்வது எந்தவித ஜனநாயக விரோத செயலும் அல்ல. அதனால் முதல்வர் இதுபற்றி கண்டிப்பாக பேச வேண்டும்" என்றார்.
Summary
SIR, Gyanesh kumar issue: CM Vijay must speak out: CPI Veerapandian
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


