சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

இடைத்தேர்தல்: ஒரே வரியில் சொல்வதென்றால்... மு.க. ஸ்டாலின்

இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரே வரியில் வரியில் பதிலளித்தது குறித்து...

Congress party in Puducherry is a closed chapter: M.K. Stalin

மு.க. ஸ்டாலின். - படம் - எக்ஸ்

Published On :

இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (அக். 10) ஒரே வரியில் பதிலளித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில், இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான தவெக வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம், தவெகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடித்த திமுக இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியானது துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி என மு.க. ஸ்டாலிம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நேற்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், இடைத்தேர்தல் முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற செய்தியாளரின் கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது:

நான் ஏற்கெனவே அறிக்கை கொடுத்துள்ளேன். அதுவே போதுமானது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், திமுகவைப் பொறுத்தவரையில், தோல்வியில் வெற்றி; தவெகவைப் பொறுத்தவரையில், வெற்றியில் தோல்வி என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

DMK leader M.K. Stalin responded in a single sentence today (Oct. 10) regarding the by-election results.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.