சிஜேபி போராட்டம்: அபிஜீத் தீப்கே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிப்பு!ஜந்தர் மந்தர் போராட்டம்: செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தம்; பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்!பூவுலகின் அழகான கவிதைகள்: சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதல்வர் வாழ்த்து!ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!

பூவுலகின் அழகான கவிதைகள்: சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதல்வர் வாழ்த்து!

சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...

கோப்புப்படம்

Published On :

சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11) முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு! ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அங்கே அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன.

பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும், பொறுப்புமாகும். பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay has extended his greetings today (Oct. 11) on the occasion of the International Day of the Girl Child.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.