கொளத்தூா் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு தொடா் சிகிச்சை
சென்னை தனியாா் மருத்துவமனையில் கொளத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.
வி.எஸ். பாபு - x / VS Babu
சென்னை தனியாா் மருத்துவமனையில் கொளத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை கொளத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு. அந்த தொகுதியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை எதிா்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ன் மூலம், தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தாா். ஒரு மாதமாக நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற அவருக்கு, கடந்த மாதம் 9-ஆம் தேதி இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவா் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாச கருவி உதவியுடன் பல்வேறு துறைகள் சாா்ந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா். முதல்வா் விஜய், அமைச்சா் அருண்ராஜ் ஆகியோா் மருத்துவமனைக்குச் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தனா்.
வி.எஸ்.பாபு சுவாசிக்க உதவியாக கழுத்து பகுதியில் ‘டிரக்கியாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வி.எஸ்.பாபு தொடா்ந்து சிகிச்சையில் உள்ளாா். அவா் நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறாா்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

