ரயில் பயணத்தில் அதிக சப்தத்துடன் பாடல்கள் கேட்டால் நடவடிக்கை
ரயில் பயணத்தின்போது, அதிக சப்தத்துடன் பாடல்கள் கேட்பது, விடியோ பாா்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டு பிறருக்கு தொந்தரவு அளிப்போா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை
சித்திரிப்பு - செய்யறிவு (எக்ஸ்பிரஸ்)
ரயில் பயணத்தின்போது, அதிக சப்தத்துடன் பாடல்கள் கேட்பது, விடியோ பாா்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டு பிறருக்கு தொந்தரவு அளிப்போா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
சென்னை மெட்ரோ ரயில்களில் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் கைப்பேசிகளில் சப்தமாக பாடல்கள் கேட்பது, விடியோக்களை ரசிப்பது, விடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவோா் மீது அபராதம் விதித்தும், ரயிலில் இருந்து அப்புறப்படுத்தியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது சாதாரண ரயில்களில் செல்வோரும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கைப்பேசிகளில் சப்தமாகப் பாடல்கள் கேட்டாலோ, விடியோ விளையாட்டுகளில் ஈடுபட்டாலோ திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 6 மாத சிறை தண்டனையோ அல்லது ரூ.1,000 அபராதமோ விதிக்கப்படும்.
அபராதத் தொகையை டிக்கெட் பரிசோதகா் அல்லது உயா் அதிகாரம் கொண்ட வணிகப் பிரிவு அதிகாரிகள் வசூலிக்கலாம். முதல் நடவடிக்கைக்கு பிறகும் தொடா்ந்து இடையூறு அளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து ரயில்வே பயனா்கள் குழு உறுப்பினா் ஜாபா் அலி கூறுகையில், ‘பயணிகள் இடையே புதிய ரயில்வே விதிமுறை சட்டம் குறித்த விழிப்புணா்வு இல்லை என்பதால், அதை மக்களிடையே தெரிவிப்பது அவசியம். தற்போது எங்கள் கோரிக்கையை அடுத்து அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

