மாவட்டங்களில் புத்தகக் காட்சி: ரூ.8.45 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு தமிழக அரசு சாா்பில் ரூ.8.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதிப் படம்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு தமிழக அரசு சாா்பில் ரூ.8.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அரசாணை: பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் மாவட்டங்கள் ஏ, பி, சி என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன.
ஏ- பிரிவுக்கு ரூ.17.50 லட்சம், பி -பிரிவுக்கு ரூ.14 லட்சம், சி -பிரிவுக்கு ரூ.12 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2023-2024, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இந்நிலையில், நிகழ் கல்வியாண்டில் (2026 - 2027) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு ரூ.8.45 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பொது நூலக இயக்குநா் இந்த நிதியை மாவட்ட கருவூலங்கள் மூலம் பெற்று புத்தகக் காட்சியை நடத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

