சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

‘மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்!

மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளதைப் பற்றி...

MK Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)

Updated On :

மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முஸ்லிமாக மதம் மாறியவர்கள் இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற முடியாது எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் சமூகரீதியான பின்னடைவு ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.

இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், ‘இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை’ எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.

தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

கடந்த திமுக அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட பிசி, எம்பிசி, எஸ்சி மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.