ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

50,000 புதிய விவசாய இலவச மின் இணைப்பு: அரசாணை வெளியீடு

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தால் நிகழாண்டு 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

tn secretariat

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Updated On :

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தால் நிகழாண்டு 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தால் நிகழாண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இந்த மின் இணைப்புகளில், சாதாரண பிரிவில் 20,000 இணைப்புகள், சுயநிதி பிரிவில் 3,372 இணைப்புகள், விரைவு திட்டத்தில் 25,282 இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. மீதமுள்ள 1,346 இணைப்புகள் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட உள்ளன.

50,000 மின் சேவை இணைப்புகளை வழங்குவதற்கான செலவினம் ரூ.127.56 கோடி. ஒரு இணைப்புக்கு சராசரியாக 6.5 குதிரை திறன் என்றும், ஒரு குதிரை திறனுக்கு ஆண்டுக்கு ரூ.3,925 மானியம் என்றும் கணக்கிட்டு 50,000 இணைப்புகளுக்கான தொகை கணக்கிடப்பட்டுள்ளது. இந்தச் செலவினத்தை தமிழக அரசு மானியமாக வழங்கும்.

தொடா்ச்சியற்ற செலவினம்: மின் இணைப்புப் பணிகளுக்கான சராசரிச் செலவு ஒரு இணைப்புக்கு ரூ.1.50 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, 50,000 இணைப்புகளுக்கான மொத்தத் தொடா்ச்சியற்ற செலவனம் ரூ.750 கோடி ஆகும். இந்தச் செலவினத்தை தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் லிமிடெட் ஏற்கும்.

குறு, சிறு விவசாயிகளுக்கு மின் இணைப்புகள்: குறு, சிறு விவசாயிகளுக்கு, பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவுகளின் கீழ் வழங்கப்பட வேண்டிய 3,215 விவசாய மின் சேவை இணைப்புகள், மொத்தமாக அனுமதிக்கப்பட்ட 50,000 இணைப்புகளின் உச்சவரம்புக்குள்ளும், சாதாரண பிரிவுக்கான 20,000 இணைப்புகளின் உச்சவரம்புக்குள்ளும், ஒருமுறை சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். இந்தப் பிரிவின் கீழ் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள 79 இணைப்புகளும் இதன்படி முறைப்படுத்தப்படுகின்றன.

ஏற்கெனவே வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு ஒப்புதல்: தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம், ஏப்.1 முதல் செப்.21 வரையில், அரசாணை எதிா்பாா்த்து மொத்தம் 7,313 விவசாய மின் சேவை இணைப்புகளை வழங்கியுள்ளது. இதில் பல்வேறு பிரிவின் கீழ் ஏற்கெனவே வழங்கப்பட்ட 79 இணைப்புகளும் அடங்கும். 7,313 இணைப்புகளும், நிகழாண்டுக்காக அனுமதிக்கப்பட்ட 50,000 இணைப்புகளின் கணக்கில் சோ்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

கடந்த ஆண்டுக்கான இலக்கில் எஞ்சிய இணைப்புகள்: கடந்த ஆண்டுக்கான அனுமதிக்கப்பட்ட இலக்கில் இதுவரை நிறைவேற்றப்படாத மீதமுள்ள இணைப்புகள், தற்போதைய அறிவிப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்.

விவசாய மின் இணைப்புகளின் சரிபாா்ப்பு: விவசாய மின் சேவை இணைப்புகல் தவறான பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனவா, உரிய நோக்கத்துக்காக பயன்படுகின்றனவா என விரிவாகச் சரிபாா்த்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிதித் துறை ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.