6000 பேராசிரியர் பணியிடங்கள் காலி; விரைவில் 2,708 பேர் நியமனம்! அமைச்சர் விஸ்வநாதன்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2,708 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பேசியது குறித்து...

அமைச்சர் விஸ்வநாதன் - கோப்புப் படம்
அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு கவலை அளிப்பதாக அமைச்சர் விஸ்வநாதன் இன்று (அக். 27) தெரிவித்தார்.
திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் உயர்கல்வி மேம்பாடு குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுடன் அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:
''தமிழகத்தில் 6,000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி அவை நிரப்பப்பட உள்ளன. விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் 2,708 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்ற சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் இதில் பாரபட்சம் இருக்கக் கூடாது'' எனக் குறிப்பிட்டார்.
மேலும், சிறுமி மாயம், சிறைக்கைதிகள் தப்பியோட்டம் குறித்துப் பேசிய அவர், ''இதுபோன்ற சம்பவங்கள் காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அரசியல் நிலைப்பாட்டைக் கடந்து, அரசு கவனமாகச் செயல்படுகிறதா? என்பதையே முக்கியமாகக் கருத வேண்டும். குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு கவலை அளிக்கிறது. பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்கான விரிவான ஆய்வுகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக் காலங்களில் மக்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்'' என அமைச்சர் விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
Summary
6,000 professor posts vacant; 2,708 appointments to be made soon Minister Viswanathan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


