சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்! காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி!!
சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பற்றி..

ரயில் சேவை - கோப்புப் படம்
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள், நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய ரயில் நேர அட்டவணையில் பல ரயில்கள் நீட்டிக்கப்பட்டிருப்பதால், பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் மாறியிருக்கிறது.
அதுபோல, ஞாயிற்றுக் கிழமைகளுக்கும் புதிய ரயில் அட்டவணை வெளியிடப்பட்டுளள்து.
புதிய ரயில் அட்டவணைப்படி,
நவம்பர் 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியும், நவம்பர் 2ஆம் தேதி முதல் வார நாள்களுக்கான புதிய அட்டவணைப்படியும் ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன.
புறநகர் ரயில் சேவைக்கான புதிய அட்டவணை!
திருவள்ளூர் - சென்னை சென்டிரல் வரை புதிய மின்சார ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரிலிருந்து மதியம் 12.25 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் சென்னை சென்டிரலை மதியம் 1.45 மணிக்கு வந்தடையும்.
சென்னை சென்டிரலிலிருந்து பட்டபிராம் வரை இயக்கப்பட்ட ரயில் திருவள்ளூர் வரை நீட்டிக்கப்படுகிறது.
அதாவது காலை 7.10க்கு சென்டிரலில் இருந்து பட்டாபிராம் புறப்படும் ரயில், காலை 8.30க்கு திருவள்ளூர் வந்தடையும்.
பட்டாபிராம் – சென்னை சென்டிரல் செல்லும் மின்சாரப் புறநகர் ரயில், இனி திருவள்ளூரிலிருந்து காலை 08.45 மணிக்குப் புறப்பட்டு 10.20 மணிக்கு சென்டிரல் சென்றடையும்.
திருவள்ளூர் வரை இயக்கப்பட்ட ரயில் நவம்பர் முதல் கடம்பத்தூர் வரை இயக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சென்டிரல் வளாகத்திலிருந்து 14.00 மணிக்குப் புறப்பட்டு 15.25 மணிக்கு கடம்பத்தூரைச் சென்றடையும்.
திருவள்ளூர் – சென்டிரல் வளாகத்திலிருந்து புறப்படும் மின்சாரப் புறநகர் ரயில், இனி கடம்பத்தூரிலிருந்து 15.35 மணிக்குப் புறப்பட்டு 17.05 மணிக்கு சென்டிரல் சென்றடையும்.
ரயில் சேவை இயக்க முறையில் மாற்றம்
சென்ட்ரல் வளாகத்திலிருந்து 19.30 மணிக்குப் புறப்படும் அரக்கோணம் விரைவு மின்சாரப் புறநகர் ரயில், அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் மின்சார ரயிலாக (Slow Train) மாற்றப்படுகிறது.
சென்ட்ரலிலிருந்து 19.45 மணிக்குப் புறப்படும் சென்டிரல் – அரக்கோணம் மின்சாரப் புறநகர் ரயில், தற்போதைய நிறுத்த முறையைப் பின்பற்றி இயக்கப்படும் விரைவு மின்சார ரயிலாக மாற்றப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் பிரிவுக்கான திருத்தப்பட்ட மின்சாரப் புறநகர் ரயில் கால அட்டவணை இணைப்பு–A-வில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆ. சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை பிரிவு
ஏற்கனவே உள்ள ரயில் சேவைகளின் நீட்டிப்பு:
சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சாரப் புறநகர் ரயில், சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டு மாற்றப்படுகிறது. இந்த ரயில் சென்டிரலில் இருந்து 05.20 மணிக்குப் புறப்பட்டு 07.55 மணிக்கு சூலூர்பேட்டையைச் சென்றடையும்.
கும்மிடிப்பூண்டி – சென்டிரல் மின்சாரப் புறநகர் ரயில், இனி சூலூர்பேட்டையிலிருந்து புறப்படும். இந்த ரயில் சூலூர்பேட்டையிலிருந்து 08.10 மணிக்குப் புறப்பட்டு 10.40 மணிக்கு சென்டிரல் சென்றடையும்.
சென்னை சென்டிரல் – சூலூர்பேட்டை பிரிவுக்கான திருத்தப்பட்ட மின்சாரப் புறநகர் ரயில் கால அட்டவணை இணைப்பு–B-வில் இணைக்கப்பட்டுள்ளது.
இ. MRTS பிரிவு!
சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான தற்போதைய பறக்கும் ரயில்களின் நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை பிரிவுக்கான தற்போதைய மின்சாரப் புறநகர் ரயில் கால அட்டவணை இணைப்பு–C-வில் இணைக்கப்பட்டுள்ளது.
ஈ. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பிரிவு
கூடுதல் நிறுத்தம்:
அரக்கோணத்திலிருந்து 07.30 மணிக்குப் புறப்படும் ரயில் அரக்கோணம் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – தாம்பரம் – சென்னை கடற்கரை பகுதி விரைவு மின்சாரப் புறநகர் ரயிலுக்கு கூடுவாஞ்சேரியில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கூடுவாஞ்சேரியை 09.20 மணிக்கு வந்தடையும்.
வார நாள்களில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் பிரிவுக்கான திருத்தப்பட்ட மின்சாரப் புறநகர் ரயில் கால அட்டவணை இணைப்பு–D-வில் இணைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் பிரிவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மின்சாரப் புறநகர் ரயில் கால அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த அட்டவணை இணைப்பு–E -வில் இணைக்கப்பட்டுள்ளது.
ரயில் நேரங்கள் மற்றும் நிறுத்தங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடைப்பட்ட நிலையங்களுக்கான ரயில் நேரங்கள் மற்றும் நிறுத்த விவரங்களை NTES செயலியில் அறிந்து கொள்ளலாம்.
Summary
Regarding the changes to the timings of Chennai suburban trains...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

