மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தனியாா் நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட மக்களின் பணத்தை விரைந்து மீட்க வேண்டும்: அன்புமணி

மதுரை மாவட்டத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் செயலி மூலம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த மக்களின் பணத்தை உடனடியாக மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

அன்புமணி - எக்ஸ்

Published On :

மதுரை மாவட்டத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் செயலி மூலம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த மக்களின் பணத்தை உடனடியாக மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டம், மேலூா், அலங்காநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நிதி நிறுவனம் ஒன்று தங்களிடம் முதலீடு செய்தால் அதை குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை காட்டி விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி கோடிக்கணக்கில் மக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனா். ஆனால், உறுதியளித்த காலத்தில் முதலீட்டைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த நிறுவனம் சில நாள்களுக்கு முன் மூடப்பட்டுவிட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த நிறுவனம் சுமாா் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக முதலீட்டாளா்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ததுடன், முகவராகவும் செயல்பட்டு லட்சக்கணக்கில் முதலீடு திரட்டிக் கொடுத்த திண்டுக்கல்லைச் சோ்ந்த ராசு என்ற இளைஞா் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இந்த மோசடி நிறுவனத்தை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த பொருளாதாரக் குற்றப் பிரிவு தவறிவிட்டது. அதைச் செய்யத் தவறிய காவல் துைான் இந்த மோசடிக்கும், உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும். தென்மாவட்டங்களில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு அவா்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல் துறையும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.