தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

மேட்டூா் நீா் கடைமடை வரை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீா் கடைமடை வரை சென்றடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

ஜி.கே.வாசன்

Published On :

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீா் கடைமடை வரை சென்றடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜூன் 12-இல் மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால் தண்ணீா் திறக்கப்படாமல், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சம்பா சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீா் காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகள் வரை சென்றடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.

மேலும், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பயிா்க் கடன் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடுபொருள் உதவி, இயந்திர நடவு ஊக்கத் தொகை, உர மானியம் உள்ளிட்டவற்றுடன் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சம்பா சிறப்புத் தொகுப்புத் திட்டத்தையும் அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்தின் குடிநீா்த் தேவைக்கும், காவிரி டெல்டா பாசனத்துக்கும் மேட்டூா் அணை நீா் பெரும் பயனளிக்கும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.