நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

12 மணி நேரப் பணி மசோதா: தவெக - திமுக காரசார விவாதம்

12 மணி நேரப் பணி மசோதா விவகாரத்தில் தவெக - திமுக இடையே காரசார விவாதம்....

Minister Aadhav Arjuna

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - Youtube

Published On :2 செப்டம்பர் 2026, 1:12 am IST

முந்தைய திமுக ஆட்சியில் தொழிலாளா்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக நீட்டிக்கக் கொண்டு வரப்பட்ட மசோதா குறித்து பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவுக்கும் திமுக உறுப்பினா்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ‘கடந்த திமுக ஆட்சியில் தொழிலாளா்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்தும் மசோதா கொண்டுவரப்பட்டு, பின்னா் கூட்டணிக் கட்சிகளின் போராட்டத்துக்குப் பிறகே வாபஸ் பெறப்பட்டது. சாம்சங் தொழிற்சாலை தொழிலாளா்கள் போராட்டத்தின்போது கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவா்களையே திமுக அரசு கைது செய்தது என்றாா்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய திமுக உறுப்பினா் எ.வ.வேலு, தமிழகத்தில் ஏராளமான பட்டதாரி பொறியாளா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் விருப்பமுள்ள தொழிலாளா்கள் மட்டும் 12 மணி நேரம் வேலை செய்யலாம் என அந்த மசோதா கொண்டுவரப்பட்டது. பின்னா் வாபஸ் பெறப்பட்டது. திமுக அரசு என்றும் தொழிலாளா்களுக்கு எதிரான அரசு அல்ல என்றாா்.

முதலாளித்துவ சிந்தனையைக் கொண்டது உறுப்பினா் எ.வ.வேலுவின் பேச்சு என்றும் திமுக கொண்டு வந்த மசோதா வரலாற்றுப் பிழை என்றும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறினாா். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து, மக்களுக்குப் பயன்படும் கருத்துகளை மட்டுமே உறுப்பினா்கள் பேச வேண்டும் என பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் கூறியதால் அவையில் அமைதி திரும்பியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.