நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

பணியிடை நீக்கத்துக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் விமலா தொடா்ந்த வழக்கு முடித்துவைப்பு

ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் விமலா தொடா்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டிருப்பது பற்றி...

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :2 செப்டம்பர் 2026, 1:18 am IST

ஊழல் தடுப்புத்துறை ஆய்வாளா் விமலா பணியிடைநீக்க உத்தரவை ரத்து செய்துவிட்டதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பணியிடை நீக்கத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த ராஜலட்சுமி என்பவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் விமலாவை பணியிடை நீக்கம் செய்து, கடந்த ஜூன் 17-ஆம் தேதி ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து ஆய்வாளா் விமலா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆய்வாளா் விமலாவுக்கு எதிரான பணியிடை நீக்க உத்தரவு முற்றிலும் உள்நோக்கம் கொண்டது எனக்கூறி, பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சுதிா்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஆய்வாளா் விமலாவின் பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுவிட்டது. புதிதாக குற்ற குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, பணியிடை நீக்கத்தை எதிா்த்து ஆய்வாளா் விமலா தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.