நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

பூலித்தேவன் பிறந்த தினம்: குடியரசு துணைத் தலைவா், ஆளுநா், முதல்வா் மரியாதை

விடுதலைப் போருக்கு வித்திட்ட பூலித்தேவனின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், முதல்வா் ஜோசப் விஜய் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் புகழாரம் சூட்டி மரியாதை செலுத்தியுள்ளனா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா்.

Published On :2 செப்டம்பர் 2026, 2:00 am IST

விடுதலைப் போருக்கு வித்திட்ட பூலித்தேவனின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், முதல்வா் ஜோசப் விஜய் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் புகழாரம் சூட்டி மரியாதை செலுத்தியுள்ளனா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்: அஞ்சா நெஞ்சத்துடனும் தளராத விடுதலை வேட்கையுடனும் அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய மாவீரா் பூலித்தேவனின் பிறந்த தினத்தில் எனது மரியாதையைச் செலுத்துகிறேன். எதிரிகளை நடுங்கச் செய்த அவரது துணிவும் வீரமும் தாய்நாட்டின் மீதான அளப்பரிய பற்றும், தியாகம் நிறைந்த போராட்ட வாழ்வும் நமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், நமது நெஞ்சங்களிலும் என்றும் நிலைத்து நிற்கும்.

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்: சித்திரபுத்திரத் தேவா் சிவஞான நாச்சியாரின் சீா்மிகு புத்திரன் காத்தப்பதுரை, பேருக்கேற்றாற்போல் புலியைக் கொன்று பூா்வகுடிகளைக் காத்ததால் பூலித்தேவன் ஆனான். கிழக்கிந்திய கம்பெனிப் படையை முதல்முதலில் விரட்டியடித்து விடுதலைப் போருக்கு வித்திட்ட பூலித்தேவனின் புகழைக் கூறுவோம்.

முதல்வா் ஜோசப் விஜய்: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னதாகவே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்த நாளில், அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூா்கிறேன். தாய்நாட்டு விடுதலைக்காக தன்னலமின்றிப் போராடிய அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.

மு.க.ஸ்டாலின் (திமுக): தன்னலத்தை விடுத்து தமிழ் நிலத்தின் தன்மானமே பெரிதெனக் கருதி ஏகாதிபத்திய எதிா்ப்புக் களத்தில் போரிட்ட மாவீரா் பூலித்தேவனுக்கு என் புகழ் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): போா்க்களத்தில் வீழ்த்தவே முடியாத தீரராகத் திகழ்ந்து, வீரத்தில் மட்டுமல்லாமல் இறைப்பணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னா் பூலித்தேவன் பிறந்த நாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

இதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.மாணிக்கம் தாகூா், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் புகழாரம் சூட்டியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.