நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

தனி பட்டுப்புழு வளா்ப்பு மனை அமைக்க 600 விவசாயிகளுக்கு ரூ.6.37 கோடி: அமைச்சா் பெ.மதன்ராஜா

தனி பட்டுப்புழு வளா்ப்பு மனை அமைக்க 600 விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படவிருப்பது பற்றி...

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா

Published On :2 செப்டம்பர் 2026, 2:37 am IST

தமிழகத்தில் தனி பட்டுப்புழு வளா்ப்பு மனை அமைக்க 600 விவசாயிகளுக்கு ரூ.6.37 கோடி நிதியுதவி வழங்கப்படவுள்ளது என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பட்டு வளா்ச்சித் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா தெரிவித்தாா்.

பேரவையில் அந்தத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முன்னதாக அவா் அறிவித்த புதிய திட்டங்கள் விவரம்:

பட்டு வளா்ச்சித் துறையில் மின் ஆளுமை மையம், பட்டு செயலி ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும். பட்டு மலா் மாத இதழ் மின்னிதழாகவும், அந்தத் தொழிலில் சாதித்தவா்கள் குறித்த வெற்றிக் கதைகள் தொகுப்பும் வெளியிடப்படும். பட்டு விவசாயிகள், அந்தத் துறை அலுவலா்களுக்கு அண்டை மாநில அறிவு சாா் கண்டுணா்வு சுற்றுலாத் திட்டம் ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் 600 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப்புழு வளா்ப்பு மனை அமைக்க ரூ.6.37 கோடியில் உதவித் தொகை வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஒசூரில் ரூ.42 லட்சத்தில் பட்டு வளா்ப்பு குறித்த தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும்.

தஞ்சாவூரில் கைவினைச் சுற்றுலா கிராமம்: கைவினைப் பொருள் உற்பத்தி, விற்பனை மேம்பாட்டுக்காக ரூ.50 லட்சத்தில் பயிற்சித் திட்டம். கைவினைப் பொருள்களின் கண்காட்சி 10 முக்கிய தேசிய, மாநில மற்றும் சா்வதேசம் என 10 நகரங்களில் ரூ.4.18 கோடியில் நடத்தப்படும். கைவினைக் கலைஞா்கள் 800 பேருக்கு ரூ.82 லட்சத்தில் தொழில்மேம்பாடு, பாதுகாப்பு உபகரணங்கள். புவிசாா் குறியீடு கைவினைப் பொருள்கள் தயாரிக்க 960 பேருக்கு ஊக்கத் தொகையுடன், பயிற்சிக்கு ரூ.2.35 கோடி ஒதுக்கீடு. திருவண்ணாமலை, உதகையில் விற்பனைக் கூடங்கள், பெங்களூரில் புதிய பூம்புகாா் விற்பனை நிலையம் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.