திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!

பழவேற்காடு மீனவர்கள் உள்பட திருவள்ளூா் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை.

மீனவர்கள்

கடல் - கோப்புப்படம்

Published On :2 செப்டம்பர் 2026, 6:30 pm IST

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி - எஃப்17 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழவேற்காடு ஏரி மற்றும் கடல் பகுதி அருகே உள்ள உள்ள ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து விண்வெளித் துறை சார்பில் ராக்கெட்கள் ஏவப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வரும் 4-ஆம் தேதி அதிகாலை செயற்கைக்கோளுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதனால், கடலில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கு மீன்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

அதன்படி, நாளை(செப். 3) மாலை 4 மணி முதல் 4-ம் தேதி அதிகாலை 6 மணி வரை பழவேற்காடு மீனவர்கள் உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

A temporary ban on venturing into the sea has been imposed on fishermen from the Pulicat and Tiruvallur districts, as the GSLV-F17 rocket is scheduled to be launched from Sriharikota in Andhra Pradesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.