வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அண்ணாமலை பல்கலை. முன்பு பேராசிரியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்!

ஆசிரியர் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக..

kanji-cooking' protest

கஞ்சி காய்ச்சும் போராட்டம் - DPS

Published On :

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் புதன்கிழமை காலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற 400-க்கும் மேற்பட்ட பேராசிரியர், ஊழியர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் தொகுப்பு ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்தரம், பேராசிரியர், ஊழியர்களுக்குப் பதவி உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கடந்த ஆக - 19 ம் தேதி முதல் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை காலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு பேராசிரியர் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.

கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சி. சுப்பிரமணியம், இணை ஒருங்கிணைப்பாளர் ஆ. ரவி, முன்னாள் ஊழியர் சங்கத் தலைவர்கள் மதியழகன், மனோகரன், பேராசிரியர் முத்து வேலாயுதம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தொடர் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் கஞ்சி காச்சும் போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.