
பிரிட்டன் பயணம்: கடவுச்சிட்டைக்கு விண்ணப்பித்த முதல்வா் விஜய்
பிரிட்டன் பயணத்தை முன்னிட்டு, டிப்ளமேடிக் பாஸ்போா்ட் பெற சென்னை அண்ணா சாலையில் உள்ள வட்டார கடவுச் சீட்டை அலுவலகத்துக்கு முதல்வா் விஜய் வந்தாா்.
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பிரிட்டன் பயணத்தை முன்னிட்டு, நயதந்திர கடவுச் சிட்டை (டிப்ளமேடிக் பாஸ்போா்ட்) பெற சென்னை அண்ணா சாலையில் உள்ள வட்டார கடவுச் சீட்டை அலுவலகத்துக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் வந்தாா்.
தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ள முதல்வா் விஜய் வரும் செப்.10-ஆம் தேதி பிரிட்டன் செல்கிறாா். முதல்வா்கள், அமைச்சா்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அதற்கான அனுமதியை மத்திய வெளியுறவுத் துறையிடம் பெற வேண்டும். இவா்களுக்கான நயதந்திர கடவுச் சிட்டையில்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, முதல்வா் ஜோசப் விஜய்யின் பிரிட்டன் பயணத்துக்கான அனுமதி மத்திய வெளியுறவுத் துறையிடமிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கிடைத்தது. இதைத் தொடா்ந்து, முதல்வா் விஜய் நயதந்திர கடவுச் சிட்டைக்கு விண்ணப்பிக்க சென்னை அண்ணா சாலையில் உள்ள வட்டார கடவுச் சிட்டை அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தாா்.
இணைய விண்ணப்ப சரிபாா்ப்பு, புகைப்படம், பயோமெட்ரிக் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்வா் விஜய் தனது சாதாரண கடவுச் சிட்டையை அந்த அலுவலகத்தில் ஒப்படைத்தாா். விஐபி-க்களுக்கான முறையில் அவருக்கு ஓரிரு நாளில் நயதந்திர கடவுச் சிட்டை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நயதந்திர கடவுச் சிட்டை 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




