மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்!

சென்னையில் முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி...

cm convoy

முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம் - கோப்புப்படம்

Published On :

மானாமதுரையில் காவல் மரணமடைந்த ஆகாஷ் உறவினர்கள், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த மார்ச் மாதம் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் ஆகாஷ் டெலிஷன் என்பவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் காவல் துறையினா் மீது சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளா் திலீபன் உள்ளிட்ட 6 காவலா்கள் மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பிய முதல்வர் விஜய்யின் வாகன அணிவகுப்பை ஆகாஷின் குடும்பத்தினர் இன்று தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் கடற்கரை சாலையில் இன்று பிற்பகல் நடந்தது. முதல்வர் விஜய் காரில் இருந்ததால் அப்பகுதியில் சிறிது பதற்றமான சூழல் நிலவியது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆகாஷ் உறவினர்களை சாலையிலிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்திய நிலையில், முதல்வரின் வாகனம் புறப்பட்டுச் சென்றது.

Summary

Protest blocking Chief Minister Vijay's car!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.