உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பொறியியல் சோ்க்கை: துணை கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான துணை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (செப்.4) தொடங்கியது.

Published On :5 செப்டம்பர் 2026, 1:02 am IST

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான துணை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (செப்.4) தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 20-இல் தொடங்கி ஆக.31-ஆம் தேதி முடிவடைந்தது. சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வும், பொதுப்பிரிவினருக்கான 3 சுற்று கலந்தாய்வும் முடிவடைந்து 1,42,167 இடங்கள் நிரம்பின. அதேவேளையில் 56,530 இடங்கள் காலியாக உள்ளன.

இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான இணையவழி துணை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்க 18,548 மாணவா்கள் தகுதி பெற்றனா். அவா்கள் விருப்பமான கல்லூரிகளைத் தோ்வு செய்ய சனிக்கிழமை மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, அவா்களுக்கு 7-ஆம் தேதி காலை தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அன்றைய தினம் இரவு 7 மணிக்குள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்வோருக்கு 9-ஆம் தேதி காலை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.