
வெள்ளி ஜரிகை வைத்ததுபோல.. பொங்கலுக்கு வழங்கும் புடவை பற்றி அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்!
பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் புடவை வெள்ளி ஜரிகை வைத்ததுபோல இருக்கும் என அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்

அமைச்சர் விஜய் பாலாஜி - file
பொங்கல் பண்டிகையின்போது, நியாயவிலைக் கடைகளில் வழங்கும் புடவைகள் பெண்களுக்கு பிடிக்கும் வகையில் வெள்ளி ஜரிகை வைத்தது போல வண்ண நிறங்களில் புடவைகள் தயாராகி வருகின்றன என்று அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா காட்பாடியில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், விளையாட்டுத்துறை சார்ந்த ஒருவரை தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக முதல்வர் தேர்ந்தெடுத்துள்ளார்.
நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள் பதக்கம் வெல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு செய்து வருகிறது.
இப்போதைக்கு தலா ஒரு கோடியே 77 லட்சம் வேட்டி சேலைகளை தயாரிக்க வருவாய்த் துறையிலிருந்து தெரிவித்துள்ளார்கள்.
சேலைகளை பொறுத்தவரை எங்கள் அக்கா, தங்கைகளுக்கு பிடித்த மாதிரி வெள்ளி ஜரிகை வைத்தது போன்று தயாரித்து உள்ளோம். கண்டிப்பாக மக்கள் விரும்புவது போல் அவை இருக்கும்.
வேலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வரும் வழியில் ரயில்வே கேட்டு உள்ளதால் இங்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்டதற்கு, இப்போதுதான் முதல்முறையாக இந்த மைதானத்திற்கு வருகிறேன். இது நீண்ட நாள் கோரிக்கை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசி உயர்நிலை மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
சர்க்காரியா கமிஷன் தொடர்பாக அமைச்சர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என கம்யூனிஸ்ட் தலைவர் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நன்றி நன்றி, என் துறையை பற்றி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன் என அமைச்சர் விஜய் பாலாஜி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



