மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு

தமிழகத்தில் 6 சிறப்பு விரைவு ரயில்களை இயக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

train

ரயில் - பிரதிப் படம்

Published On :

தமிழகத்தில் 6 சிறப்பு விரைவு ரயில்களை இயக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரிலிருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 06045) அக்.2 முதல் 23-ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரி முதல் சென்னை எழும்பூா் வரையிலான சிறப்பு விரைவு ரயில் (எண்: 06046) அக்.24 முதல் அக்.25 வரையிலும், கோவையில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்லும் விரைவு ரயில் (எண்: 06181) அக்.8 முதல் நவ.26 வரையிலும், ஜெய்ப்பூரிலிருந்து கோவை வரை இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06182) அக்.11 முதல் நவ.29 வரையிலும், தூத்துக்குடியில் இருந்து நாராஸ்பூருக்கு செல்லும் விரைவு ரயில் (எண்: 06019) அக்.5 முதல் நவ.30 வரையிலும், நாராஸ்பூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு சிறப்பு ரயில் (எண்: 06020) வரும் அக்.7 முதல் நவ.2 வரையிலும் கால நீட்டிப்பு செய்து இயக்கப்படவுள்ளது.

சிறப்பு ரயில்களின் முன்பதிவு சனிக்கிழமை (செப்.12) காலை 8 மணிக்குத் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.