லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ராகுலை பிரதமராக்க விஜய் பிரசாரம் செய்வார்! 40-க்கு 40 வெல்வோம்! மாணிக்கம் தாகூர்

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று காங்கிரஸ் திட்டவட்டம்...

Chief Minister Vijay | Tamil Nadu Congress President Manickam Tagore

முதல்வர் விஜய் | தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Published On :

ராகுல் காந்தியைப் பிரதமராக்க முதல்வர் ஜோசப் விஜய் பிரசாரம் செய்வார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாணிக்கம் தாகூர் இன்று மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

”முதல்வர் விஜய், தவெகவினர், காங்கிரஸினர் என அனைவரும் தெளிவாக இருக்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர். அதனை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். அதற்கான காலம் வரும்போது அனைவரும் வெளிப்படையாக அறிவிப்பார்கள்.

தேசிய அளவில் இந்தியா கூட்டணியாகவும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியாகவும் செயல்படுவோம். இது மாநிலத்துக்கான கூட்டணி. தமிழ்நாடு மற்றும் புதுவையில் இந்த கூட்டணிக்கான தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் தொடர வேண்டும். இந்த கூட்டணியில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் இந்தியா கூட்டணியின் உறுப்பினர்களாக உள்ளனர். 2029 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ராகுல் தலைமையிலான இந்தியா கூட்டணி பெறும். தமிழ்நாட்டில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் வெல்லும். ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் முதல்வர் விஜய் பிரசாரம் செய்வார். அவரின் பிரசாரத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை” எனத் தெரிவித்தார்.

Summary

Vijay will campaign to make Rahul the Prime Minister! We will win all 40 seats! — Manickam Tagore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.