கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திருச்சி-காரைக்குடி, தாம்பரம்-விழுப்புரம் ரயில்கள் பகுதி ரத்து

திருச்சி கோட்ட பகுதியில் தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குறிப்பிட்ட 6 நாள்களுக்கு ...

trains

ரயில் - கோப்புப் படம்

Published On :

சென்னை: திருச்சி கோட்ட பகுதியில் தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குறிப்பிட்ட 6 நாள்களுக்கு திருச்சி-காரைக்குடி மற்றும் 21- ஆம் தேதி தாம்பரம்-விழுப்புரம் இடையிலான ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுத்த செய்திக்குறிப்பு:

திருச்சி ரயில்வே கோட்டத்தில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, வரும் 16, 17, 18, 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடி செல்லவேண்டிய டெமு ரயில் (எண் 76820) திருவாரூா் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளன. அந்த தேதிகளில் அந்த ரயில்கள் திருவாரூா் நிலையத்திலிருந்து மீண்டும் மாலை 4.15 மணிக்குப் புறப்படும்.

அதேபோல, தாம்பரத்திலிருந்து வரும் 21- ஆம் தேதி காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லவேண்டிய மெமு ரயில் முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது. அந்த ரயில் மீண்டும் மறுமாா்க்கத்தில் முண்டியம்பாக்கத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம் செல்லும்.

வழிமாற்றி இயக்கப்படும் விரைவு ரயில்கள்: வரும் 19, 21, மற்றும் 22 ஆகிய தேதிகளில் நாகா்கோவிலிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு கோவை விரைவு ரயில் (எண்16321) வழக்கமான பாதைக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூா் ஆகிய பாதைகளில் இயக்கப்பட்டு கோவைக்குச் செல்லும். அந்த ரயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை நிலையங்களில் நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.