மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

அடக்கி வாசிங்க! திமுகவின் தயவால்தான் காங்., விசிக, முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது! அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி....

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :

மக்கள் தங்களுக்ளு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று தவெகவினர் மட்டும்தான் சொல்ல முடியும் என்றும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் சொல்ல முடியாது என்றும் பாமக தலைவர் அன்புமணி கூறினார்.

பெரியார் பிறந்தநாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அன்புமணி,

"கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். கூட்டணியில் இருந்துகொண்டே இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுவது ஒரு குழப்பமான நிலைப்பாடு.

ஆனால், இதில் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. விஜய்க்கு தான் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று தவெகவினர் மட்டும்தான் சொல்லலாம், சொல்ல முடியும். காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் எல்லாம் திமுக கூட்டணியில் போட்டியிட்டு திமுகவின் தயவால்தான் வெற்றி பெற்றார்கள். இப்போது தவெக பக்கம் வந்துவிட்டார்கள். அதன்பிறகு வீரவசனம் பேசுவது எல்லாம் அர்த்தமில்லை. அடக்கி வாசியுங்கள்" என்றார்.

Summary

Congress, VCK, and Muslim League won in elections with the help of dmk: Anbumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.