மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கோயில் பிரசாதத்தை நாய் உண்டதால் தகராறு.. மருமகளை அடித்துக் கொன்ற மாமனார்!

மது போதையில் ஆத்திரமடைந்த மாமனார் மருமகளை கொன்ற துயர சம்பவம் பற்றி..

புத்தூர்

Published On :

கோயில் பிரசாதத்தை நாய் உண்டதால் மாமியார் - மருமகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கோபத்தில் மருமகளை அடித்துக் கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமு - வள்ளி தம்பதியினர். இவர்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தஞ்சாவூரில் வசித்து வருகின்றனர்.

அம்மாபேட்டையில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்காக தனது மாமனார் வீடான சிவசாமி மலர்கொடி வீட்டிற்குச் சென்று உள்ளனர். கோயிலில் வழங்கிய பிரசாதத்தை மலர்க்கொடி தனது கணவர் சிவசாமிக்கு வாங்கி வீட்டில் வைத்துள்ளார். மருமகள் வள்ளி வளர்த்த நாய் பிரசாதத்தை உண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாமியார் மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மருமகள் மாமியாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மது போதையில் வந்த சிவசாமி நடந்த விவரங்களை அறிந்து ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து மருமகள் வள்ளியை தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.