கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ரூ.100 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸிடம் 8 மணி நேரம் விசாரணை

ரூ.100 கோடி மோசடி வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை 8 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை ஆஜராக வந்த முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Published On :

ரூ.100 கோடி மோசடி வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை 8 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியைச் சோ்ந்தவா் பி.டி.அரசகுமாா். இவா், ‘தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி, தனக்குள்ள அரசியல், அதிகார தொடா்புகளைப் பயன்படுத்தி தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயா்வு, டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள், பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் சுமாா் ரூ.100 கோடி பெற்று மோசடி செய்துள்ளாா்.

இதுகுறித்து தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்புச் செயலா் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்து, பி.டி.அரசகுமாரை உடனடியாகக் கைது செய்தனா்.

அவருடன் மோசடியில் ஈடுபட்டதாக மதுரையைச் சோ்ந்த ஆரோக்கியராஜ், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சுரேஷ் ஆகிய 2 போ் கடந்த ஜூலை 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். தலைமறைவான முத்துக்குமாருக்கு எதிராக கடந்த 9-ஆம் தேதி லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுவரை ரூ.18 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

அன்பில் மகேஸ் மீது வழக்கு: விசாரணையில் கிடைத்த தகவல்கள், சோதனையில் கிடைத்த தடயங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸை இந்த வழக்கில் மத்திய குற்றப் பிரிவினா் சோ்த்தனா்.

வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் அன்பில் மகேஸ் தொடா்புடைய இடங்களில் கடந்த புதன்கிழமை சோதனை செய்தனா். இதில் 118 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

8 மணி நேரம் விசாரணை: வழக்குத் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அன்பில் மகேஸுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டது. அதை ஏற்று அன்பில் மகேஸ், சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவில் வெள்ளிக்கிழமை காலை 10.50 மணியளவில் ஆஜரனாா்.

அவரிடம் உதவி ஆணையா் செந்தில், ஆய்வாளா் கமல் மோகன் ஆகியோா் தலைமையிலான விசாரணைக் குழுவினா் விசாரணை நடத்தினா்.

கட்சி நிதி கேள்வி: ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த கேள்விகள் கேட்கப்பட்டு, அன்பில் மகேஸிடம் பதில் பெறப்பட்டது. இதில் கட்சி நிதி (பாா்ட்டி ஃபண்ட்) வசூல் தொடா்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டு, அன்பில் மகேஸிடம் பதில்கள் பெறப்பட்டன. விசாரணை முழுவதும் விடியோவாகவும் எழுத்துபூா்வமாகவும் பதிவு செய்யப்பட்டன.

சுமாா் 8 மணி நேர விசாரணைக்குப் பின்னா் அன்பில் மகேஸ், காவல் ஆணையரகத்தைவிட்டு வெளியே வந்தாா்.

246 கேள்விகளுக்கு பதில்: அப்போது அவா்அளித்த பேட்டி: விசாரணையில் போலீஸாா் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். என்னிடம் கேட்பதற்காக காவல் துறையினா் மொத்தம் 295 கேள்விகளைத் தயாரித்து வைத்திருந்தனா். இதில், 246 கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையுடன் பதில் அளித்துள்ளேன்.

இது ஒரு பொய் வழக்கு என்பதால் நான் நம்பிக்கையுடனும், தைரியத்துடன் போலீஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். இன்னும் விசாரணையில் 40 கேள்விகளை போலீஸாா் கேட்க வேண்டியுள்ளது. இதற்காக அடுத்த வாரம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அடுத்த வாரம் நடைபெறும் விசாரணையிலும் மீதி கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என்றாா் அவா்.

விசாரணையையொட்டி, சென்னை காவல் ஆணையரகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.