சென்னை விமான நிலையம் தனியார் வசம் செல்கிறதா? நிர்மல்குமார் பதில்
சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியது குறித்து...
சென்னை விமான நிலையம் தனியார் வசம் செல்கிறதா? - பிரதிப் படம்
சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது, விமான நிலையம் போன்ற விஷயங்கள் அரசுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களெல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இவையெல்லாம் தனியார் வசம் சென்றுவிட்டால், அவை பொதுமக்களுக்கு விலை உயர்ந்ததாகி விடும்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதி சம்பந்தப்பட்டவை அரசுடன் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான், அவற்றின் மீது பொதுமக்களுக்கு 100 சதவிகித உரிமை இருக்கும்.
அதுதான் தவெக அரசின் நோக்கம். அரசும் அதை நோக்கித்தான் பயணிக்கிறது.
பொதுமக்களிடம் தினசரி பயன்பாட்டில் உள்ளவை அரசுடனேயே இருக்க வேண்டும். தனியார் வசத்தில் செல்லுமெனில், அவை எட்டாக் கனியாக மாறிவிடும். என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாட்டில் குறைபாடுகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்து மாநில அரசு அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது, "தமிழ்நாடு தொழிற்துறைக்கு ஏற்ற மாநிலமாகவும், வணிகத்தையும் முதலீட்டையும் ஈர்ப்பதற்குத் தேவையான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும் முக்கியமானவை. பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்குககளைக் கையாளும் திறன் என எதுவாக இருந்தாலும், சென்னை விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவை.
மாநிலத்தில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் இன்றியமையாதது என்பதால், சென்னை விமான நிலையத்தை தற்போது நிர்வாகத்துவரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை மாற்றிவிட்டு, வேறு நிறுவனத்திடம் நிர்வாகத்தைக் கொண்டுவர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நிர்வகித்து வரும் சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியாருக்கோ வேறொரு நிறுவனத்துக்கோ மாற்றக்கோரி முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
Summary
CM Vijay writes to PM Modi seeking to change the operator of Chennai airport
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








