யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா: நிலம் எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு

மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கான நில எடுப்பு அறிவிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது தொடர்பாக...

Tamil Nadu Government withdraws land acquisition notification

நிலம் எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு

Published On :

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் செய்யாறு தொழிற்பூங்கா 3 ஆவது நிலை விரிவாக்கத்திற்காக, மேல்மா உள்பட 11 கிராமத்தில் சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பு திரும்பப்பெறுவதாக சிப்காட் மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3 விரிவாக்கத்திற்காக திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் அலகு 1 பிளாக் 2-ல் 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு மேல்மா கிராம விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு தவெக ஆதரவு தெரிவித்து வந்ததுடன் தவெக செயற்குழுவில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிருந்தது.

ஆனால், தேர்தலுக்கு பின்னர் ஆட்சி பொறுப்புக்கு வந்த தவெக அரசு, மேல்மா கிராமத்தில் 22 ஹெக்டேர் புன்செய் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியிட்டது.

இது, அனைவரது மத்தியிலும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ந்து விவசாயிகள், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததை தொடர்ந்து நில எடுப்பு விவகாரத்தில் இருந்து தவெக அரசு பின்வாங்கியது.

திரும்பப் பெற்றது

இந்த நிலையில், சிப்காட் செய்யாறு தொழிற்பூங்கா 3 ஆவது நிலை விரிவாக்கத்திற்காக, மேல்மா உள்பட 11 கிராமத்தில் சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பு திரும்பப்பெறுவதாக சிப்காட் மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்படி அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை எண். VI(1)/443(d-6)2026 திரும்பப் பெறப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்திருந்த நிலையில் அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

Summary

Melma SIPCOT Industrial Park: Tamil Nadu Government withdraws land acquisition notification

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.