குற்றவாளிகளைக் கைது செய்யாமல் போராடுவோரின் மீது காவல்துறை தடியடி! உதயநிதி
ராமநாதபுரம், சிவகங்கையில் இரட்டைக் கொலை தொடர்பாக தவெக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்...

முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
சிவகங்கையில் இரட்டைக் கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. ராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக் கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?
‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
Dummy à®®à¯à®¤à®²à®®à¯à®à¯à®à®°à®¿à®©à¯ à®à®à¯à®à®¿ à®à®®à¯à®¨à¯à®¤ நாள௠மà¯à®¤à®²à¯ தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®©à¯ à®à®à¯à®à®®à¯ à®à®´à¯à®à¯à®à¯ à®à®¾à®±à¯à®±à®¿à®²à¯ பறநà¯à®¤à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯.
— Udhay (@Udhaystalin) September 19, 2026
à®à®°à®¾à®®à®¨à®¾à®¤à®ªà¯à®°à®®à¯ à®à¯à®´à®à¯à®à®°à¯à®¯à®¿à®²à¯ à®à®à®¨à¯à®¤ 15-à®à®®à¯ தà¯à®¤à®¿à®¯à¯à®®à¯, à®à®¿à®µà®à®à¯à®à¯ à®à®¾à®³à¯à®¯à®¾à®°à¯à®à¯à®µà®¿à®²à®¿à®²à¯ à®à®¤à®±à¯à®à¯ à®à®à¯à®¤à¯à®¤ நாளà¯à®®à¯ à®à®°à®à¯à®à¯à®à¯à®à¯à®²à¯à®à®³à¯ நà®à®¨à¯à®¤à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ தமிழà¯à®¨à®¾à®à¯à®à¯à®¯à¯ à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ à®à®´à¯à®¤à¯à®¤à®¿â¦
Summary
Police lathi-charge protesters instead of arresting the culprits: Udhayanidhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




