
இடைத்தேர்தல்: தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்!
இடைத்தேர்தலையொட்டி தாராபுரம் தொகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது பற்றி...

தபால் வாக்கு சேகரிக்கும் பணி - கோப்புப்படம்
தமிழகத்தில் இடைத்தேர்தலையொட்டி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களது வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக். 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை அக். 9 ஆம் தேதியும் நடைபெறுகிறது. தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என இந்த இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
இடைத்தேர்தலையொட்டி முதற்கட்டமாக தாராபுரம் தொகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று (செப். 22) தொடங்கியுள்ளது.
85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களது வீடுகளுக்கே சென்று தபால் வாக்குப் பதிவு செய்ய வைத்து அலுவலர்கள் அவற்றைச் சேகரிக்கின்றனர்.
இதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதியில் மொத்தம் 1,236 தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 30 குழுக்கள் அமைக்கப்பட்டு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Summary
By-election: Collection of postal votes begins in dharapuram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





