வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களை அசிங்கப்படுத்துகிறீர்களா? சீமான் காட்டம்
மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறித்து சீமான் கேள்வி எழுப்பியது பற்றி...
பிரசாரத்தில் பேசிய சீமான் - X | NTK
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களை அசிங்கப்படுத்துகிறீர்களா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது, திணிக்கப்பட்ட இந்தத் தேர்தலுக்காக சென்னையில் இருந்து 2 மணிநேரம் பயணம் செய்து வரவேண்டியுள்ளது. தவெகவில் போட்டியிடும் மரகதம் குமரவேல் வெற்றிபெற்று, மீண்டும் வேறொரு கட்சியில் சேர மாட்டார் என என்ன நிச்சயம்? இதனைவிட வேறு ஏதேனும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் அங்கு போய் விடுவார்கள்.
நீங்கள் வகிக்கும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, எங்கள் கட்சியில் சேருங்கள் என்று சொல்லும் ஒரு கட்சி சொல்கிறதென்றால், இது என்ன மாண்புமிக்க செயல். இதற்காகவே அவர்களை (தவெக) நீங்கள் தோற்கடிக்க வேண்டும்.
வரிசையில் நின்று வாக்களித்து, வெற்றிபெற வைத்தால் நம்மை அசிங்கப்படுத்துகிறார்களா? எவ்வளவு இழிவாகச் சிந்திக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
அரசுக்கு எதிலிருந்து எல்லாம் வருவாய் வருமோ, அவற்றையெல்லாம் இலவசமாக அறிவித்துவிட்டு, பின்னர் காசு இல்லை என கடன் வாங்கி எதற்காக இலவசம் தர வேண்டும்.
மாநிலத்தில் ஓராண்டுக்கு ரூ. 50,000 கோடிக்கு மது அருந்துகின்றனர். தீபாவளி திருநாளில் மட்டும் ரூ. 790 கோடிக்கு மது அருந்துகின்றனர். ஒரு நடிகரின் திரைப்படம் வெளியானால் சுமார் ரூ. 35 கோடி வசூலிக்கிறது. அப்படியெனில், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் கோடிகோடியாகக் கொட்டிக் கொடுக்கும் மக்களுக்கு இலவசம் எதற்கு? என்று கேள்வி எழுப்பினார்.
Summary
NTK Leader Seeman accuses TVK regarding the holding of a by-election in the Maduranthakam constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






