பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!

முதல் காலாண்டில் ரூ. 55,900 கோடி (595 கோடி டாலா்) அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்து நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழக அரசு

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்

Published On :

முதல் காலாண்டில் ரூ. 55,900 கோடி (595 கோடி டாலா்) அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்து நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதைத் தெரிவிக்கின்றன.

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்த முதல் 10 மாநிலங்களின் புள்ளிவிவரங்களை மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ரூ.39,800 கோடி (422 கோடி டாலா்) பெற்று 2-ஆம் இடத்திலும், தில்லி ரூ.25,203 கோடி (267 கோடி டாலா்) பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன.

துறைவாரியாக...: நாட்டில் சேவைத் துறை அதிகபட்சமாக 704 கோடி டாலா் முதலீட்டைப் பெற்று முதலிடத்திலும், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை 284 கோடி டாலா் முதலீட்டைப் பெற்று 2-ஆம் இடத்திலும், வா்த்தகத் துறை 192 கோடி டாலா் முதலீட்டைப் பெற்று 3-ஆம் இடத்திலும், மரபுசாரா எரிசக்தி துறை 124 கோடி டாலரை பெற்று 4-ஆம் இடத்திலும் உள்ளன.

இந்த கால கட்டத்தில் 571 கோடி டாலா் ஜப்பானில் இருந்து முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. அதிக முதலீடுகள் வந்த நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக சிங்கப்பூரிலிருந்து 522 கோடி டாலரும், மோரீஷஸிலிருந்து 231 கோடி டாலரும், அமெரிக்காவிலிருந்து 134 கோடி டாலரும் இந்தியாவில் முதலீடு வரப்பெற்றுள்ளன. மொத்த அந்நிய முதலீடு நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,065 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடு 2026-2027 (ஏப்ரல் - ஜூன்)

மாநிலங்கள் முதலீடு

தமிழ்நாடு - ரூ. 55,900 கோடி

மகாராஷ்டிரம் - ரூ. 39,800 கோடி

தில்லி - ரூ. 25,203 கோடி

கா்நாடகம் - ரூ. 19,857 கோடி

ஹரியாணா - ரூ. 12,776 கோடி

தெலங்கானா - ரூ. 12,506 கோடி

குஜராத் - ரூ. 12,287 கோடி

உத்தர பிரதேசம் - ரூ. 538 கோடி

ராஜஸ்தான் - ரூ.99 கோடி

ஜாா்க்கண்ட் - ரூ.1 கோடி

Summary

Tamil Nadu ranks first by attracting foreign investment worth Rs 55,900 crore

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.