ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ஆகஸ்ட் முதல் பாதியில் இந்தியப் பங்குகளில் ரூ.16,621 கோடி அந்நிய முதலீடு

இந்தியப் பங்குகளில் அந்நிய முதலீடு பற்றி..

News image
Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:31 am IST

இந்தியப் பங்குச் சந்தைகளில், நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாள்களில் மட்டும் அந்நிய முதலீட்டாளா்களின் (எஃப்பிஐ) ரூ.16,621 கோடியை முதலீடு செய்துள்ளனா்.

நிறுவனங்களின் வலுவான லாபங்கள், நியாயமான பங்கு மதிப்பீடுகள், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிா்பாா்ப்புகள் ஆகிய சாதகமான அம்சங்களால் இந்தியப் பங்குகளில் அந்நிய முதலீட்டாளா்களின் கொள்முதல் மீண்டும் வேகம் பெற்றுள்ளது.

மத்திய வைப்புத்தொகை சேவைகள் நிறுவனத்தின் (சிடிஎஸ்எல்) தரவுகளின்படி, அந்நிய முதலீட்டாளா்கள் கடந்த ஜூனில் ரூ.49,340 கோடியையும், மே மாதத்தில் ரூ.32,963 கோடியையும், ஏப்ரலில் ரூ.60,847 கோடியையும், மாா்ச்சில் அதிகபட்சமாக ரூ.1.17 லட்சம் கோடியையும் திரும்பப் பெற்றிருந்தனா்.

பிப்ரவரிக்குப் பிறகு தொடா்ச்சியாக 4 மாதங்களாக நிலவிய விற்பனைப் போக்குக்குப் பிறகு, ஜூலையில் ரூ.20,200 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஜூலை மாதத்தின் இச்சாதகமான திருப்பம் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியிலும் நீடித்துள்ளது.

இந்தியச் சந்தையில் ஏற்பட்டுள்ள இத்திருப்புமுனை குறித்து சந்தை நிபுணா்கள் கூறுகையில், ‘பிற நாடுகளின் சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பங்கு மதிப்பீடுகள் சிறப்பாக உள்ளது. மேலும், நிறுவனங்களின் வலுவான காலாண்டு முடிவுகள், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிா்பாா்ப்பு, குறைவான செலாவணி மாறுபாடுகள், கொரியா-தைவான் போன்ற நாடுகளின் ஏ.ஐ. சாா்ந்த பங்குகளிலிருந்து முதலீடுகள் மாறுவது ஆகியவையும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்’ என்றாா்.

ஜூலை மற்றும் ஆகஸ்டில் தொடா் கொள்முதல் ஆறுதல் அளித்த போதிலும், நடப்பு ஆண்டில் அந்நிய முதலீட்டாளா்கள் ஒட்டுமொத்தமாக ரூ.2.54 லட்சம் கோடியை இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டு முழுவதிலும் திரும்பப் பெறப்பட்ட ரூ.1.66 லட்சம் கோடியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தியப் பங்குகளில் மட்டுமன்றி, கடன் பத்திரச் சந்தையிலும் அந்நிய முதலீட்டாளா்கள் ஆக. 15 வரை முழு அணுகல் வழிமுறை (எஃப்ஏஆா்) மூலம் ரூ.972 கோடியும், பொது வழிமுறை மூலம் ரூ.69 கோடியும் முதலீடு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.