பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

திமுகவைவிட 10 மடங்கு குறைவாக செலவு செய்து ஆட்சியைப் பிடித்த தவெக!

திமுகவைவிட 10 மடங்கு குறைவாக செலவு செய்து தவெக ஆட்சியைப் பிடித்தது பற்றி...

Chief Minister Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)

Published On :

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவைவிட 10 மடங்கு குறைவாக தோ்தல் செலவு செய்து தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. தோ்தல் அறிவிக்கப்பட்ட நாள்முதல் முடியும் வரையில் செலிவிடப்பட்ட தொகையை கட்சிகள் தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பித்துள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை செலவிட தோ்தல் ஆணையம் அனுமதி அளிக்கிறது. இந்த நிலையில், கட்சிகள் செலவிட்டதாக சமா்ப்பித்த தொகையை தோ்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், திமுக ரூ.197.84 கோடியும், அதிமுக ரூ.112.39 கோடியும், நாம் தமிழா் கட்சி ரூ.1.37 கோடியும், பாஜக ரூ.51.56 கோடியும், காங்கிரஸ் ரூ. 7 கோடியும், தவெக ரூ.19.8 கோடியும் செலவிட்டுள்ளது.

ஆட்சியைப் பிடித்த தவெக, திமுக செலவு செய்ததைவிட 10-இல் ஒரு பங்கை மட்டுமே செலவு செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது.

விஜய்யின் விமான பயணச் செலவுக்காக ரூ.3.54 கோடியும், விளம்பரச் செலவுகள் ரூ.6.34 கோடியும், விஜய் போட்டியிட்ட பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் ரூ.40 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தவெக தெரிவித்துள்ளது.

Summary

TVK captured power by spending ten times less than the DMK!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.